”பூமியிலுள்ள நகரங்கள்,கிராமங்கள்,பாலைவனங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும்,ஒவ்வொரு கூடாரத்திலும் இஸ்லாத்தின் இந்தக் கலிமாவை அல்லாஹூத்தஆலா நுழையவைத்தே தீருவான்.இதை ஏற்றுக்கொள்பவர்களை அல்லாஹூத்தஆலா கலிமா உடையவர்களாக்கி கண்ணியமளிப்பான்.ஏற்காதவர்களை இழிவுபடுத்துவான்.பிறகு அவர்கள் முஸ்லிம்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்வார்கள் ” என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் மிக்தாதிப்னு அஸ்வத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Tuesday, July 26, 2011
” மானிடர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்.அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்.அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்.பின்னர் அவ்விருவரிலிருந்தும் அநேக ஆண்களையும்,பெண்களையும்(வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்.ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்.அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர்(தமக்குரிய உரிமைகளைக்)கொள்கிறீர்கள்.மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கிறான்.” (ஸூரத்துன் நிஸா:1)
Subscribe to:
Comments (Atom)